அம்பாறையில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனை கல்முனை
தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது அரபு நாடு ஒன்றில்
இருந்து தொழில் நிமிர்த்தம் விடுமுறையில் நாடு திரும்பிய நாவிதன்வெளி
பகுதியை சேர்ந்த இளைஞன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைக்கு சென்ற
நிலையில் பணப்பை ஒன்றினை இன்றையதினம்(22) வீதியில் கண்டெடுத்துள்ளார்.
பின்னர் குறித்த
இளைஞன் வீதியில் இருந்து கண்டெடுத்த குறித்த பணப்பையை எடுத்துக்கொண்டு தனது
வீட்டுக்கு சென்று ஆராய்ந்து அப்பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன்
தொடர்பு கொண்டுள்ளார்.
உரியவரிடம் ஒப்படைப்பு
இதன்போது, தன்னிடம் பணப்பை இருப்பதாகவும் அதனை கல்முனை தலைமையக பொலிஸ்
நிலையத்திற்கு வந்து பணப்பையை பெற்றுக் கொள்ள வருமாறும்
கூறியுள்ளார்.
அத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த குறித்த பணப்பையை
கண்டெடுத்த அவ்விளைஞன் பொலிஸாரை சந்தித்து பணப்பையை தவறவிட்ட உரிய
நபரிடம் பணப்பையை ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை
கோரியுள்ளார்.
குறித்த இப்பணப்பையில் குறித்த ஒரு தொகை பணம் உட்பட சாரதி
அனுமதி பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கி இருந்தன.
பாராட்டு
இந்தநிலையில், பணப்பையை தவறவிட்டவர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அதனைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் தவறவிடப்பட்ட பணப்பையை
பொலிஸார் முன்னிலையில் உரிமையாளிடம் ஒப்படைக்க முயற்சி செய்த அரபு நாட்டில்
இருந்து தொழில் நிமிர்த்தம் விடுமுறையில் நாடு திரும்பிய நாவிதன்வெளி பகுதியை
சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
