Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அநுல அரசு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அநுல அரசு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு, அவர்களின் சிறப்புரிமைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தற்போதுள்ள கட்டளைச் சட்டங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பல முன்னாள் ஜனாதிபதிகள் தமது சமர்ப்பிப்புகளை ஏற்கனவே குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்புரிமை அறிக்கை

இதன்படி ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அரர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டமூலத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியம், உத்தியோகபூர்வ வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளருக்கான உரிமை மட்டுமே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

you may like this


NO COMMENTS

Exit mobile version