Home இலங்கை பொருளாதாரம் நாட்டின் நெல் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் நெல் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்

0

நாட்டில் கடந்த பெரும்போக பருவத்தில் நெல் உற்பத்தி 2.63 மில்லியன் மெட்ரிக் டொன்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2.4 சதவீதம் வீழ்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த மே மாதத்தில் மீன் உற்பத்தியும் 5.3 சதவீதம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை

குறிப்பாக, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே காலப்பகுதியில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சீனி உற்பத்தியும் 33.8 வீதத்தாலும் மற்றும் தேங்காய் உற்பத்தி 0.5 வீதத்தாலும் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/rice-production-price-information-by-cbsl-1725262172

NO COMMENTS

Exit mobile version