Home இலங்கை நீங்கிய மீன்பிடித் தடைக் காலம்! கடலுக்கு திரும்பிய இந்திய படகுகள்

நீங்கிய மீன்பிடித் தடைக் காலம்! கடலுக்கு திரும்பிய இந்திய படகுகள்

0

இந்தியாவில்  நடைமுறையில் இருந்த இரு மாத மீன்பிடித் தடைக் காலம் நிறைவுற்று இன்று(18) அதிகாலை படகுகள் கடலுக்கு வருகை தந்துள்ளன.

ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை நிலவிய மீன்பிடித்
தடைக் காலம் நிறைவுற்றதன் பின்னர் இன்று அதிகாலை 3 மணிக்கு அதிக படகுகள்
கடலுக்கு  கடற்றொழிலுக்காக பயணிக்கின்றன என தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்திய கடற்றொழிலாளர்கள்

கடற்றொழிலில் ஈடுபட நிலவிய தடைக் காலத்தில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலின்றிக்
காணப்பட்ட வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டல் தொடருமா என்ற
ஐயம் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் எழுப்பப்படுகின்றது.

இதேநேரம் கடற்பரப்பில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுவதனால்
கடற்றொழிலியல் அதிக பாதிப்பு நிலவுவதாகவும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version