நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எப்போது தீர்வு வழங்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதனை ஏற்றுக்கொள்வதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
அரிசி தட்டுப்பாடு
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவுதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்னும் ஓரு மாதம் வரையில் இந்தத் தட்டுப்பாட்டு நிலைமை நீடிக்கும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.