Home இலங்கை பொருளாதாரம் இனிமேல் அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது! பிரதியமைச்சர் திட்டவட்டம்

இனிமேல் அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது! பிரதியமைச்சர் திட்டவட்டம்

0

இலங்கைக்கு இனிமேல் அரிசி இறக்குமதி செய்வதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் வைத்து வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன நேற்று(11) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கை இனியும் நீட்டிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.

அரிசி தன்னிறைவு

அத்துடன், இனிவரும் காலங்களில் இலங்கையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதற்கான தேவையை ஒழித்து, நாட்டில் அரிசி தன்னிறைவை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் நேற்றுமுன்தினம் நள்ளிரவுடன் முடிவடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version