இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணையகத்தின் தலைவராக சிரேஸ்ட செய்தியாளர் தயா
லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
இந்த வாரம் இந்த நியமனத்தை வழங்கினார்.
லங்காபுர துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த ஒரு
பத்திரிகையாளர்.
தகைமைகள்
அவர் 1965ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ
இதழான ‘அத்த’ செய்தித்தாளில் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற லங்காபுர, திவயின, சிலுமின, தினமின,
ரிவிர மற்றும் லக்பிம செய்தித்தாள்களிலும், பிபிசியின் சந்தேசய சேவைகளிலும்,
அரசாங்க தகவல் திணைக்களத்திலும் பணியாற்றினார். அவர் நீண்டகால நாடாளுமன்ற செய்தியாளராகவும் செயற்படுகிறார்.
