Home இலங்கை அரசியல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாரில்லை – பாரத் அருள்சாமி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்க தயாரில்லை – பாரத் அருள்சாமி

0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட தொழில்சார்
உரிமைகளையும், நலன்புரி விடயங்களையும் விட்டுக்கொடுப்பதற்கு ஒருபோதும்
தயாரில்லை என பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி
நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி (Barath Arulsamy) தெரிவித்துள்ளார். 

கொழும்பில் (Colombo) நடைபெற்ற பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஆண்டுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மலையக பகுதிகளில் கடந்த காலங்களில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களை
முழுமைப்படுத்துவதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் 600 மில்லியனை
ஒதுக்கியுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்களிப்பு

அத்துடன், ஜனாதிபதியின் உதவியுடன் மலையக மக்கள் வாழும் 12
மாவட்டங்களிலும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க 2000 மில்லியனுக்கும்
அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, இதற்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அதற்கு
பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம். அதனை வழங்க கம்பனிகள் முன்வர
வேண்டும்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் மலையக மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின் கீழ்
உட்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதாரம் மேம்பாடு குறித்து கூடுதல் கவனம்
செலுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் சிறுவர் அபிவிருத்தி
நிலையங்களை மேம்படுத்தவும், போசாக்கு மட்டத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை
எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version