Home இலங்கை அரசியல் ரில்வின் சில்வாவால் யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகம்

ரில்வின் சில்வாவால் யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள நூலகம்

0

மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால்
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்(7) நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 யாழ். கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின்
யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

 நூலகம் திறப்பு

இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான
கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான
அறிக்கை அடங்கிய புத்தகம் ஒன்று யாழ் ஊடக அமையத்தால் குறித்த நூல்
நிலையத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version