Home முக்கியச் செய்திகள் இந்திய பிரதமர் மோடி – ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல்

இந்திய பிரதமர் மோடி – ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல்

0

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த சண்டையை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவிற்கு (Saudi Arabia) பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நான் பதவி ஏற்ற நாளிலேயே போரை விரும்ப மாட்டேன் என்று கூறினேன்.

அணு ஏவுகணைகளை வர்த்தகம்

அதனால்தான் இந்தியா (India) -பாகிஸ்தான் (Pakistan) இடையே நடைபெற்று வந்த சண்டையை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன்.

வர்த்தகத்தை முன்னிறுத்தி இந்த உடன்பாட்டை எட்டவைத்தேன். ‘நண்பர்களே, வாருங்கள். ஒரு ஒப்பந்தம் செய்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம்” என்று அவர்களிடம் நான் கூறினேன்.

அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்றேன்.

மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள்

அவர்கள் இருவரும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள், மிகவும் வலுவான தலைவர்கள், நல்ல தலைவர்கள், புத்திசாலித் தலைவர்கள்.

எனவே சண்டையை நிறுத்திவிட்டார்கள். சிறியதாகத் தொடங்கிய போர் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் சிக்கி இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை உருவாகி இருந்தது” என்றார்.

 

NO COMMENTS

Exit mobile version