Home ஏனையவை வாழ்க்கைமுறை நாட்டில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

டெங்கு நோயாளர்களின் இறப்பு விகிதத்தை விட எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த முதுகுட இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் சுமார் 7,500 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இதேவேளை இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சில வாரங்களில் கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இந்தத் தொகையைக் குறைக்கத் தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version