கிளிநொச்சி – ஏ9 வீதியில் டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று 12.09.2025 நண்பகல் 12.45. மணியளவில் கிளிநொச்சி காவல் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சாரதியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
ஏ9 வீதியில் பாடசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிள்ளையை ஏற்றிக்கொண்டு டிப்போ சந்திப் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதே பகுதியில் இருந்து பரந்தன் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளில் பின் பகுதியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் பயணித்த பாடசாலை மாணவர் காயத்துடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகன தப்பி செல்ல முற்பட்ட வேலையில் வீதியால்
சென்ற பொதுமக்கள் டிப்பர் சாரதியை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம்
ஒப்படைத்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
