யாழில் (Jaffna) மோட்டார் சைக்கிளும் காரும்
ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (16.08.2025) மாலை யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அவதானமின்றி வீதியை கடக்க முயற்சி
யாழ்ப்பாண பக்கத்தில் இருந்து காங்கேசன்துறை பக்கம் நோக்கி குறித்த காரானது
பயணித்துக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அவதானமின்றி
திடீரென வீதியை கடக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று
மோதியது.
மோட்டார் சைக்கிளும் காரும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இருப்பினும் உயிர்
சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
