Home முக்கியச் செய்திகள் வடக்கில் சர்ச்சையை தோற்றுவித்த வீதி புனரமைப்பு செயற்பாடு!

வடக்கில் சர்ச்சையை தோற்றுவித்த வீதி புனரமைப்பு செயற்பாடு!

0

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைப்பு தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு, அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைக்கப்படுகின்றது.

இவ்வாறான  வீதி புனரமைப்பு செயற்பாடு பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீதி புனரமைப்பு

அத்துடன், பிரதான வீதி ஒன்று இவ்வாறு புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், இந்த  விடயம் தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version