Home இலங்கை சமூகம் ரோஹிங்கிய அகதிகள் விவகாரம்: சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் சிஐடிக்கு அழைப்பு

ரோஹிங்கிய அகதிகள் விவகாரம்: சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் சிஐடிக்கு அழைப்பு

0

வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன்
பிரிராடோவை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு
விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

அண்மையில் முல்லைத்தீவு (Mullaitivu) கடலில் தமக்கு அடைக்கலம் தருமாறு படகு ஒன்றின் ஊடாக அகதிகள் பலர் வருகைத் தந்தனர்.

குறித்த படகில் வந்த சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் விமானப்படையின்
கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கம்

அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வந்த
நிலையில் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு
முன்னால் வடக்கு – கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு கவனயீர்ப்பு போராட்டம்
ஒன்றை முன்னெடுத்தது.

குறித்த போராட்டத்தில் பங்குபற்றிய வடக்கு – கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு
குழுவின் இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ, மியன்மாரில் பாதுகாப்பு இல்லை
தமக்கு பாதுகாப்பு தருமாறு அடைக்கலம் கோரிய ரோஹிங்கிய முஸ்லிம்களை இலங்கை
அரசாங்கம் மியன்மாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி இருந்தார்.

கவனயீர்ப்பு போராட்டம்

அவர்களை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக இன்னொரு நாட்டிடம் சர்வதேச மனித
உரிமைகள் நிறுவனங்களின் கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க வேண்டும் என
வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக
கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு
கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version