Home முக்கியச் செய்திகள் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி : மீண்டும் அணித்தலைவராகும் ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி : மீண்டும் அணித்தலைவராகும் ரோகித் சர்மா

0

மும்பை இந்தியன்ஸ்(mumbai indians) அணிக்கு, மீண்டும் ரோஹித் சர்மா(rohit sharma) தலைவராக செயற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட பின்னர் பல பிரச்சினைகள் அணிக்குள் வெடித்துள்ளது.

களத்தில் ரோஹித் சர்மா ஆலோசனை கூற வந்தால், அதனை ஹர்திக் பாண்டியா (Hardik Pandya)புறக்கணிப்பது, ரோஹித்தை பவுண்டரி லைனில் நிற்க வைப்பது, இம்பாக்ட் வீரராக களமிறக்கியது என ஹர்திக் பல தவறுகளை செய்தார்.

மேலும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இறுதியில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்திற்கு சென்றது.

ஹர்திக் பாண்டியாவால் அணிக்குள் குழப்பம்

மேலும், அணியில் ரோகித்துக்கு அடுத்து, சூர்யகுமார் யாதவ்(suryakumar yadav) மற்றும் பும்ரா (bumrah)ஆகியோர் அணித்தலைவர்களாக தகுதியான நிலையில் இருக்கையில், ஹர்திக்கை ட்ரேடிங்கில் வாங்கி, அவருக்கு அணித்தலைவர் பதவியை கொடுத்ததில் பும்ரா சூர்யா, ரோகித் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை.

ஹர்திக்கிற்கு அணித்தலைவர் பதவியை கொடுத்த பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி, இப்படி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவது, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகளுக்கு முழுவதுமாக பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை 

ரி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மாவை, மேலும் இரண்டு சீசன்களில் தலைவராக விளையாட வைக்கலாமா என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

ரோகித்துக்கு ஆதரவாக மஹேல

ஹர்திக்கை ட்ரேடிங் மூலம் வாங்கி அணித் தலைவராக நியமிக்க, முழு காரணமாக இருந்தவர், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர்தான். இந்நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கி, 2022 வரை பயிற்சியாளராக இருந்த மஹேல ஜெயவர்தனவை அந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக செயற்பட உள்ள மஹேல ஜெயவர்தன, ரோகித் சர்மாவுக்கு முழு ஆதரவாக இருப்பதாகவும், அவரை மீண்டும் அணித்தலைவராக கொண்டு வர வேண்டும் எனவும் 2 வருடங்களுக்கு பின்னர் சூர்யகுமார் யாதவுக்கு அணித்தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version