Home முக்கியச் செய்திகள் ஜனாதிபதி அநுரவின் செயற்பாடு :மகிழ்ச்சியில் எதிரணி எம்.பி

ஜனாதிபதி அநுரவின் செயற்பாடு :மகிழ்ச்சியில் எதிரணி எம்.பி

0

 தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில்  எதனையும் பார்க்காமல் பேசிய விதம் மகிழ்ச்சியளிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை(kalutara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(rohitha abeygunawardena) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றையதினம்(03) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் கடினமான பாதையில் அரசாங்கம்

“அரசாங்கம் செல்ல வேண்டிய பயணம் சுமுகமானதாக இல்லை. இந்த அரசாங்கம் மிகவும் கடினமான பாதையில் உள்ளது. ஆட்சியைப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அரசின் நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஓரிரு வருடங்கள் கடக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

நான் நினைக்கிறேன் யதார்த்தமான எதிர்க்கட்சியாக நாம் செயற்படுவோம் என்று.அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல பணிகளுக்கும் எதிர்க்கட்சியாக இருந்து நாம் ஆதரவளிக்கவேண்டும். நாம் எமது பரம்பரை செயற்பாட்டை மாற்றியமைக்கவேண்டும்.மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version