Home சினிமா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் 90ஸ் டாப் நடிகை ரோஜா.. யார் படத்தில் தெரியுமா?

மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் 90ஸ் டாப் நடிகை ரோஜா.. யார் படத்தில் தெரியுமா?

0

ரோஜா

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரோஜா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 1990களில் டாப் நாயகியாக வலம் வந்தார்.

பட வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த போதிலும் ரோஜாவிற்கு அரசியல் மீது பார்வை விழ அதில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். அரசியலில் முழு ஈடுபாடு காட்டியதால் நடிப்பில் இருந்து சுத்தமாக விலகினார்.

எனக்கு பிடித்த நடிகை இவர் தான்.. ஆர்யன் பட விழாவில் நடிகர் விஷ்ணு சொன்ன ரகசியம்!

யார் படத்தில்? 

இந்நிலையில், தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் ரோஜா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

அதாவது, லெனின் பாண்டியன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு திரும்பி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

இப்படத்தில் கங்கை அமரன், சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஸ்ரீதா ராவ் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிடி பாலச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.

NO COMMENTS

Exit mobile version