Home இலங்கை அரசியல் மந்திரவாதி ஞானக்காவுக்கு பல மில்லியன் நட்டஈடு – சிக்கலில் முன்னாள் அரசு

மந்திரவாதி ஞானக்காவுக்கு பல மில்லியன் நட்டஈடு – சிக்கலில் முன்னாள் அரசு

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானக்காவுக்கு 28 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு கோட்டா கோ ஹோம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது, அனுராதபுரத்தில் ஞானக்காவுக்கு சொந்தமான ஆலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது.

இதற்கு நட்டஈடாக 28 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நட்டஈடு

அதேவேளை, இந்த வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்காக கடந்த அரசாங்கம் மேலும் 1125 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version