Home இலங்கை கல்வி தகவல் அறியும் உரிமை ஆணையகத்துக்கு உறுப்பினர்கள் கோரப்படுகின்றனர்

தகவல் அறியும் உரிமை ஆணையகத்துக்கு உறுப்பினர்கள் கோரப்படுகின்றனர்

0

தகவல் அறியும் உரிமை ஆணையகத்துக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக
வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் அமைப்புகளிடமிருந்து
பரிந்துரைகளை தேசிய அரசியலமைப்பு பேரவை கோரியுள்ளது.

அளவுகோல்களை கோடிட்டுக் காட்டி, சட்டம், நிர்வாகம், பொது நிர்வாகம், சமூக
சேவைகள், ஊடக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில், சிறப்பைக்
கொண்டவர்கள், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசாங்க அறிக்கை ஒன்று
கூறியுள்ளது.

தகவல் அறியும் உரிமை 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், எந்தவொரு மாகாண சபை அல்லது எந்தவொரு உள்ளூர்
அதிகாரசபையின் உறுப்பினர்கள், எந்தவொரு பொது அல்லது நீதித்துறை பதவியையும்
அல்லது வேறு எந்த இலாபகரமான பதவியையும் வகிப்பவர்கள், எந்தவொரு அரசியல்
கட்சியுடனும் தொடர்புடையவர்கள், அல்லது எந்தவொரு தொழிலையும் மேற்கொள்பவர்கள்
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

இந்தநிலையில் விண்ணப்பங்கள் 2025 பெப்ரவரி 07ஆம் திகதியன்று அல்லது அதற்கு
முன் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம், அரசியலமைப்பு பேரவையின் பொதுச்
செயலாளர், அரசியலமைப்பு கவுன்சில் – அலுவலகம்,இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ
ஜெயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

அல்லது constitutional council@parliament.lk என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படல்வேண்டும்.

இதேவேளை ‘தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமனம்’ என்பது அஞ்சல்
உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் பொருளாகக் குறிப்பிடப்பட
வேண்டும் என்றும் அரசியலமைப்பு பேரவை அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version