புதிய இணைப்பு
மறைந்த தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம்
ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் காலை
8 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் ஆரம்பமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பின்னர் மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் – தச்சன்காடு இந்து மயானத்தில்
புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) புகழுடல்
யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியை நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3 மணிக்கு யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில்
இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இல்லம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான அமரர் மாவை சேனாதிராஜா, யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணித்தார்.
இதனை தொடர்ந்து, அவரது மரணம் அறிந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றனர்.
இந்நிலையில், அன்னாரின் புகழுடலை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பொறுப்பேற்றதுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
