Home இலங்கை பொருளாதாரம் வலுவிழக்கும் ரூபாய் – தொடர்ந்து 320 ரூபாக்கு மேல் நிற்கும் டொலர்

வலுவிழக்கும் ரூபாய் – தொடர்ந்து 320 ரூபாக்கு மேல் நிற்கும் டொலர்

0

மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நீடித்து வரும் போர் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த விடயம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் 

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325.97 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அதன் விற்பனை பெறுமதி 335.70 ரூபாவாக காணப்படுகின்றது.

கடந்த 29 ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.45 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.24 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.  

தங்கத்தின் விலை 

இலங்கையில் தங்க விலை இன்று (01) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த 29 ஆம் திகதி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் ,இன்று 1000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் , 1000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/rupee-depreciated-further-against-the-us-dollar-1780296903

NO COMMENTS

Exit mobile version