இலங்கையை ரஷ்யா மனிதாபிமான உதவிகளை விமானம்
மூலம் அனுப்பி வைத்துள்ளது.
35தொன் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஏற்கனவே இலங்கைக்கு
புறப்பட்டுள்ளதாக தூதர் குணசேகர கூறியுள்ளார்.
இந்த நிவாரணகள் இன்று(10) இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி கவலை
முன்னதாக இலங்கையில் ஏற்பட்ட பேரழிவுக்கு ரஷ்ய ஜனாதிபதி தமது கவலையை இலங்கை
ஜனாதிபதியிடம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீள கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
