Home முக்கியச் செய்திகள் சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய யுவதி செய்த செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய யுவதி செய்த செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

0

சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 29 வயது ரஷ்ய யுவதி ஒருவர் உனவதுன சுற்றுலா காவல் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தப் பெண் விசா விதிகளை மீறி உனவதுன பகுதியில்  இரவு விடுதி போன்று உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய பெண் மேலதிக விசாரணைகளுக்காக ஹபராதுவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் நாளை (5) காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.

NO COMMENTS

Exit mobile version