Home இலங்கை அரசியல் மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன் – ஜெய்சங்கரிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில்

மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன் – ஜெய்சங்கரிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில்

0

இலங்கையில் (srilanka) இம்முறை மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதித்
தேர்தலை நடத்தியுள்ளோம். இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை
மதிக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (4.10.2024) வெள்ளிக்கிழமை இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் (colombo) உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், எனது ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் நாட்டுக்கும், மக்களுக்கும்
என்னால் இயன்ற பணிகளை ஆற்றியுள்ளேன்.

அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிய
முழுமையான ஒத்துழைப்புகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்தியாவுடனான வலுவான
உறவைப் பேணும் என்று நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பிரதித் தூதுவர் கலாநிதி
சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட
ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version