Home இலங்கை அரசியல் அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் யாரை ஏமாற்றுகின்றார் ரணில்! சபா குகதாஸ் கேள்வி

அதிகாரப் பகிர்வு விவகாரத்தில் யாரை ஏமாற்றுகின்றார் ரணில்! சபா குகதாஸ் கேள்வி

0

பொலிஸ் அதிகாரம் தரமாட்டேன் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe), அதிகாரப் பகிர்வு பற்றி பேசி யாரை
ஏமாற்றுகின்றார் என வடக்கு மாகாண
சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugadas) கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரால் இன்று (03.07.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,

“ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஜனவரிக்கு தீர்வு வரும், சுதந்திர தினத்திற்கு தீர்வு வரும் என கூறினார்.

பொலிஸ் அதிகாரம்

அதன் பின்னர் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என கூறினார்.

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் உயிருடன் இருக்கும் போது, சர்வாதிகார போக்கில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் தர முடியாது என பகீரங்கமாக அறிவித்த ரணில் விக்ரமசிங்க, சம்பந்தன் இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா?

அல்லது சம்பந்தனின் இறப்பிலும் அரசியலா? என்ற கேள்விதான் எழுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ சிங்கள ஆட்சியாளர்களின் வாயில் இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு தான் தீர்வு என்ற உண்மை உச்சரிக்கப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version