Home சினிமா அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு போட்டியாக வரும் விஜய் படம்.. ரிலீஸ் குறித்து அறிவிப்பு

அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு போட்டியாக வரும் விஜய் படம்.. ரிலீஸ் குறித்து அறிவிப்பு

0

குட் பேட் அக்லி

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் பெரிதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், கோடையில் கண்டிப்பாக இப்படம் வெளிவரும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

போட்டியாக வரும் விஜய் படம்

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு போட்டியாக கோடையில் விஜய்யின் சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. கடந்த ஆண்டு கில்லி படம் ரீ ரிலீஸாகி மாபெரும் வெற்றியடைந்த நிலையில், சச்சின் படமும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என, தயாரிப்பாளர் தாணு அறிவித்து இருந்தார்.

அதன்படி, இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் ‘கோடையில் கொண்டாட்டம், சச்சின் ரீ ரிலீஸ்’ என அவர் பதிவிட்டுள்ளார். இது விஜய்யின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version