Home இலங்கை அரசியல் வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

வடக்கில் அறுவடையை ஆரம்பித்த ஜே.வி.பி: மகிந்த தரப்பு ஆதங்கம்

0

வடக்கில் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக இனவாதத்தை விதைத்ததன் பிரதிபலனையே ஜே.வி.பி தற்போது அறுவடை செய்கிறது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அக்கட்சயின் தமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

வடக்கில் அறுவடை 

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “மகிந்த ராஜபக்ச பிரிவினைவாத போரை முடிவுக்கு கொண்டு வந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தினார்.

ஆனால் ஜே.வி.பி மீண்டும் வாக்குகளுக்காக பிரிவினைவாதத்தை விதைத்தனர்.

“வினைவிதைத்தவன் வினையறுப்பான்”என்பதற்கேற்ப அதை இன்று அரசாங்கம் வடக்கில் அறுவடை செய்கிறது.

ஒரு நாடு என்ற வகையில் நாம் இதை பாரதூரமாக பார்க்க வேண்டியுள்ளது.

மகிந்தவின் செல்வாக்கு 

மேலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செல்வாக்கை சீர்குழைக்க ஜே.வி.பி எவ்வளவு தான் பொய் கூறினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நாட்டில் முப்பது வருட யுத்தத்தை முடிவுறுத்தி, பாரிய அபிவிருத்தியை செய்த மகிந்தவின் நாமத்தை பொய்களால் மறைக்க முடியாது.”   

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version