Home சினிமா சாய் பல்லவி ரசிகர் செய்த உணர்ச்சிபூர்வ செயல்.. வைரலாகும் புகைப்படம்

சாய் பல்லவி ரசிகர் செய்த உணர்ச்சிபூர்வ செயல்.. வைரலாகும் புகைப்படம்

0

சாய் பல்லவி

இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ப்ரேமம். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி.

இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை சாய் பல்லவியின் ஹோம்லி லுக் மற்றும் எதார்த்தமான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

நாகார்ஜுனா மகன் அகிலை விட மருமகளுக்கு வயது அதிகமாம்.. இத்தனை வயது பெரியவரா?

சாய் பல்லவி சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

உணர்ச்சிபூர்வ செயல்

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் சாய் பல்லவியின் முகத்தை பச்சை குத்தி கொண்டு அவருடனே புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்டு சாய் பல்லவியின் ரசிகர்கள் இந்த நபர் மிகவும் கொடுத்து வைத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version