Home இலங்கை அரசியல் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது! சஜித் குற்றச்சாட்டு

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது! சஜித் குற்றச்சாட்டு

0

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு தனிப்பட்ட அரசியல்
நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் அளிக்கப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின்
பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வெளிநாடுகளில் வீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றவர்களுக்கான
கொடுப்பனவுகளில் ஐந்து வீதத்தை செஸ் வரியாக அறவிடுகின்றனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள்

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்ற நிறுவனங்கள் அத்தோடு உழைப்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நலன்புரி விடயங்களுக்காக அந்தப்பணம் பயன்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த பணத்தை ஒரு தனியார் நிறுவனம் பயன்படுத்துகின்றது.

இலங்கையை வெற்றியடைய செய்வதற்கு பதிலாக
தனியார் நிறுவனத்தின் வெற்றிக்காக பயன்படுத்தப்படுகின்றது.

இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஊழல், மோசடி, திருட்டு தொடர்பில் கண்டறியப்படும்.

செஸ்வரி ஊடாக பெறப்படுகின்ற மிகப்பெரிய தொகையை தனிநபர் ஒருவரின் அல்லது அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம் அல்ல.

மக்களின் பணம் 

பல்வேறுதரப்பினரின் மற்றும் பல குழுக்களின் பொதுவான அபிப்பிராயத்துக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் இப்போது போன்று
தனிப்பட்ட அரசியல் விடயங்களுக்காக பயன்படுத்தப்படும்.

மக்களின் பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோன்று இஸ்ரேல் போன்ற நாடுகளில் வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்புகள்
முறையாக இடம் பெறுவதில்லை.

அதில் மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அது குறித்து ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்தி பொறுப்புக் கூற முடியுமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு சட்டவிரோத மனித
செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version