Home இலங்கை அரசியல் அநுர தரப்பை வீழ்த்த ரணில் – சஜித் அணிகள் வகுக்கும் வியூகம்

அநுர தரப்பை வீழ்த்த ரணில் – சஜித் அணிகள் வகுக்கும் வியூகம்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை (NPP) கடும் போட்டியை வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இணைந்து கொள்ளும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக ருவன் விஜயவர்தன (Ruwan Wijewardene) நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இணங்கியதன் அடிப்படையில் இந்த கூட்டணி உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி சின்னம்

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியாக போட்டியிட்டது போன்று அடுத்த பொதுத் தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிட வேண்டும் முதலாவதாக ஹரின் பெர்னாண்டோ முன்மொழிந்தார்.

அரசியல் நகர்வு

அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணக்கம் தெரிவித்ததுடன், ரணில் விக்ரமசிங்க ஐ.தே.க தலைமைத்துவத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதே அவரது பிரதான நிபந்தனையாக இருந்தது.

இந்த நிலையில், ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கலந்துரையாடல் தொடரும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐ.தே.க சார்பில் ருவான் விஜேவர்தன ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version