Home இலங்கை அரசியல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! திருகோணமலை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் சஜித்..

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! திருகோணமலை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் சஜித்..

0

திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத போதிலும் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எதிர்க்கட்சியானாலும் அதை நிறைவேற்றி வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பௌத்தத்துக்கு முன்னுரிமை 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதோடு ஏனைய சமயத்தவர்களுக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் பிரச்சினை ஏற்படுமானால் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படலாம்.

     

அதனால் நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். ஒருமைப்பாடே தேசிய பாதுகாப்பாகும். அப்படி பார்த்தால் இன்று நடப்பது பேரழிவாகும். பொலிஸார் உயர் இடத்தில் கிடைக்கும் பணிப்புரைக்கமைய பௌத்த சிலையை அகற்றி பின்னர் வைக்கின்றனர்.

வேலை செய்ய தெரியாதவர்கள்

வேலை செய்ய தெரியாது. அத்தோடு வேலை செய்து பழக்கமில்லை. இவ்வாறான பிரச்சினைகளை மென்மையாக தீர்த்து கொண்டிருக்க வேண்டியதாகும். வார்த்தைகளில் பாரிய செயற்பாடுகள் தொடர்பில் பேசுவோர் செயற்பாடுகளில் இல்லை.

நாம் தேர்தலுக்கு அல்லது புள்ளடிகளுக்கு மதத்தை பயன்படுத்தாக உண்மையான பௌத்தர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

  

NO COMMENTS

Exit mobile version