Home இலங்கை அரசியல் ராஜபக்சர்களின் சட்ட சிக்கலில் சிக்கிய சஜித்!

ராஜபக்சர்களின் சட்ட சிக்கலில் சிக்கிய சஜித்!

0

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய சட்டத்தரணிகளால் குறிப்பிட்ட சிலருடன் கலந்தாலோசித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் வரைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் செப்டம்பரில் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தை சங்கடப்படுத்துவதே இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கான முதன்மையான குறிக்கோளாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோதல் முயற்சி

கடந்த இரண்டு வாரங்களாக, மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக மிகச் சிறிய குழுக்கள் போராட்டங்களைத் தொடங்கி பொலிஸாருடன் மோத முயற்சித்து வருவதாகவும் சில அரசியல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

அந்த போராட்டங்கள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டன எனவும் ஆளும் தரப்பின் உள்ளக வட்டாரங்கள் கூட்டிக்காட்டியுள்ளன.

இதற்கிடையில், பாதுகாப்பு துணை அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரிக்கப்பட வேண்டியுள்ளது என்று பல சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version