Home இலங்கை அரசியல் பாப்பரசரின் மறைவுக்கு சஜித் இரங்கல்!

பாப்பரசரின் மறைவுக்கு சஜித் இரங்கல்!

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை(25) காலை வத்திக்கான் தூதரகத்துக்குச் சென்று அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரங்கல்

இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்துக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வேவைச் சந்தித்துள்ளார்.

சிறிது நேரம் உரையாடியதைத் தொடர்ந்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் குறிப்பு எழுதி, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு குறித்து உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version