Home இலங்கை அரசியல் விமர்சனங்களுக்கு பதிலடி : கல்வித் தகைமைகளை சமர்பித்த சஜித்

விமர்சனங்களுக்கு பதிலடி : கல்வித் தகைமைகளை சமர்பித்த சஜித்

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) கல்வித் தகைமைகள் தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் நாடாளுமன்ற ஹன்சாட் திணைக்களத்தில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் இன்று (19) காலை கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிவித்தலை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், சஜித் பிரேமதாசவினாலேயே இந்தச் சான்றிதழ்கள் மற்றும் ஏனையவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளது.

கல்வித் தகைமை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தக் கல்வித் தகைமைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள் குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில் கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் நாடாளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

NO COMMENTS

Exit mobile version