Home இலங்கை அரசியல் சஜித்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தை நடத்துவதில் முரண்பாடு: யாழில் மூடப்பட்ட பிரசார களம்

சஜித்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தை நடத்துவதில் முரண்பாடு: யாழில் மூடப்பட்ட பிரசார களம்

0

யாழில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கான தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெறவிருந்த பிரசார களம் இரு வர்த்தகர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டில்  மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – நெல்லியடி கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானமே இவ்வாறு இன்று(09.09.2024)
பூட்டப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசாவின் மனைவி ஜலனி பிரேமதாச பங்கேற்கும் பிரசார கூட்டம் நாளை(10)
காலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

இதேவேளை, குறித்த மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சார
கூட்டம் நேற்று முன்தினம்(07) மாலை நடைபெற்றது.

இந்நிலையில், அந்த மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவான பிரசார கூட்டத்தினை
நடாத்த ஒருவர் மைதானத்தினை பார்வையிட வந்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவர், எதிர்க்கட்சி
தலைவருக்கு ஆதரவான நிகழ்வுக்கு மைதானத்தை பெற்றவருடன் முரண்பட்டு கொண்ட
நிலையில், ஜனாதிபதியின் நிகழ்வுக்கு மைதானம் பெற்றவர் தனக்கு அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version