எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
சஜித் அங்கு அரச அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பரஸ்பர
நலன் சார்ந்த விடயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளார்.
உத்தியோகபூர்வ நிகழ்வுகள்
இந்த விஜயத்தின் போது அவர் தொடர்ச்சியான உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும்
கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
