Home இலங்கை அரசியல் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதி: கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் கருத்து

சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதி: கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் கருத்து

0

வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவு காரணமாக  ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றி
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் இன்று (03.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 

“சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும் நாட்டின்
பொருளாதாரத்தினை முன்னேற்றக்கூடிய வகையிலும் சஜித் பிரேதாசவின்
தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

வெற்றி வேட்பாளர்

நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் எமது ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாசாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது நிர்வாகத்தில்
மிகச் சிறப்பாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள
மக்களது எதிர்காலத்தை முன்னேற்றக் கூடிய வகையில் சிறப்பானதொரு தேர்தல்
விஞ்ஞாபனத்தை முன்வைத்து அவர் தேர்தல் களத்தில் நிற்கின்றார்.

தமிழரசுக் கட்சியும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள விடயத்தை நாம் வரவேற்று பாராட்டுகின்றோம்.
இதன் மூலம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மூவின மக்களாலும்
நேசிக்கப்பட்டு ஒரு வெற்றி வேட்பாளராக சஜித் காணப்படுகின்றார்.

வெற்றியின் பங்காளர்கள்

இதன் மூலம் வடக்கு கிழக்கில் நிலவுகின்ற அதிகார பிரச்சனைகளுக்குரிய தீர்வு
அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள வடக்கு கிழக்கு
பகுதிகளுக்கான விசேட அபிவிருத்தி திட்ட செயற்பாடுகளை வெளிநாட்டு நிதி
உதவியுடன் முன்னெடுக்க உள்ளார்.

எனவே, வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து
மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றியின் பங்காளர்களாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

Source: https://tamilwin.com/article/sajith-got-north-and-east-support-1725363873

NO COMMENTS

Exit mobile version