Home உலகம் ஆச்சரியத்தில் உறைய வைக்கும் ஆராய்ச்சி: தங்கத்தில் நாக்கு, விரல் நகங்கள் கண்டுபிடிப்பு

ஆச்சரியத்தில் உறைய வைக்கும் ஆராய்ச்சி: தங்கத்தில் நாக்கு, விரல் நகங்கள் கண்டுபிடிப்பு

0

சமீபத்தில் எகிப்தின் ஆக்சிரைஞ்சரஸ் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், தங்க நாக்கு மற்றும் விரல் நகங்கள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த கண்டுபிடிப்புகள் எகிப்திய தலைநகரம் கெய்ரோவில் இருந்து 200 கி.மீ தொலைவில், நைல் நதியின் அருகே உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த தங்கத்திலான கண்டுபிடிப்புகளானது, 13 மம்மி சடலங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நம்பிக்கை

எகிப்து மரபுடைய மக்கள், இறந்தவர்களை தங்க ஆபரணங்களுடன், விலை உயர்ந்த பொருட்களுடன் புதைத்தனர், ஏனெனில் அவர்கள் மறுஜென்மத்தில் உயிர்த்தெழுந்து கடவுளிடம் செல்லவேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

அத்துடன், மரணமடைந்தவர்கள் உயிருடன் வரும்போது அவர்களுக்கு தேவையானவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படியான பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கின்றன.

தங்கம் கடவுளின் மேல் தோலைப் போன்றதாக கருதப்பட்டு, கடவுளிடம் பேச சரியான வழியாக தங்க நாக்கு பயன்படும் என அவர் நம்பிக்கை வைத்துள்ளனர்.

எகிப்தியர்களின் மரபு

இதேவேளை, உயிரிழந்த அரசர்கள் கடவுளிடம் செல்லும்போது அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக தங்க நகங்களையும் சேர்த்து புதைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

பல தெய்வ வழிபாட்டு பொருட்கள், ஸ்கிராப் வண்டுகள் உருவங்கள் மற்றும் ஓவியங்கள் ஆகியவை அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   

இந்த அகழ்வாய்வு, எகிப்தியர்களின் மரபுகள் மற்றும் சமய நம்பிக்கைகளின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.    

NO COMMENTS

Exit mobile version