Home இலங்கை இலங்கை விரைந்துள்ள சீன கப்பல்: காரணம் என்ன தெரியுமா!

இலங்கை விரைந்துள்ள சீன கப்பல்: காரணம் என்ன தெரியுமா!

0

சீன மக்கள் குடியரசிற்கு சொந்தமான ‘பீஸ் ஆர்க்’ என்ற மருத்துவமனை கப்பல் ஒன்று இன்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இலங்கை மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சை அரங்குகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள், விசேட வைத்திய சேவைகள் உள்ளிட்ட நவீன வசதிகளும் இதில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பல் பயணம்

இந்த ஆண்டு ஜூன் மாதம் ‘2024 சகவாழ்வு பணிக்காக’ சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் இருந்து கப்பல் புறப்பட்டது.

இதன்படி, பயணத்தின் போது கப்பல் 13 நாடுகளுக்குச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version