Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

0

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை நேற்று(16) கொழும்பில் சந்தித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து, தாம் இருவரும்; விரிவான விவாதங்களில் ஈடுபட்டதாக பிரேமதாச, சந்திப்புக்கு பின்னர் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர்

இதற்கிடையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்தித்ததாக புதன்கிழமை தமது எக்ஸ் பக்கத்தில் உயர்ஸ்தானிகர் பதிவிட்டிருந்தார்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி உட்பட பன்முகத்தன்மை கொண்ட இந்திய-இலங்கை பிரச்சினைகள் குறித்து, இதன்போது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக சந்தோஸ் ஜா கூறியிருந்தார்.  

NO COMMENTS

Exit mobile version