Home இலங்கை அரசியல் சஜித்-ரணில் சந்திப்பு! இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பிலும் தகவல்

சஜித்-ரணில் சந்திப்பு! இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பிலும் தகவல்

0

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமண நிகழ்ச்சி

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகளின் திருமண வைபவத்தில் அவர்கள் இருவரும் சந்தித்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, திருமண நிகழ்ச்சியின் போது, மணமகள் சார்பில் சஜித் பிரேமதாசவும், மணமகன் சார்பில் ரணில் விக்ரமசிங்கவும் சாட்சிக் கையொப்பமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நீண்ட பேச்சுவார்த்தை எதுவும் இடம்பெறவில்லை எனவும் மிகச் சுருக்கமான கருத்துப் பரிமாற்றம் ஒன்று நடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version