Home இலங்கை அரசியல் மீண்டும் தேசிய வைத்தியசாலைக்கு விரைந்த சஜித்

மீண்டும் தேசிய வைத்தியசாலைக்கு விரைந்த சஜித்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று(26) பிணை வழங்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திப்பதற்காகவே அவர் தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, இன்று கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவானின் உத்தரவின் படி, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

சீரற்ற உடல்நிலை காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ‘Zoom’ தொழில்நுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில், பிணை வழங்கப்பட்டதையடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ரணிலை சந்திப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version