Home இலங்கை அரசியல் விசேட தேவையுடையோர்களுக்கான காப்புறுதி திட்டம்: சஜித்தின் நற்செய்தி!

விசேட தேவையுடையோர்களுக்கான காப்புறுதி திட்டம்: சஜித்தின் நற்செய்தி!

0

நாட்டில் காணப்படும் விசேட தேவையுடையோர்களுக்கு காப்புறுதிகளையும் வழங்குவோம் என என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தோடு விசேட தேவையுடையோர்கள் பயன்படுத்துகின்ற உபகரணங்களுக்கு அறவிடப்படும் வரியையும் நீக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால்
வகுக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பேண தனியான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்படும். 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பிரகாரம் மொத்த மக்கள் தொகையில் 8.7%
விசேட தேவையுடையோர் இருக்கின்றார்கள்.

வங்கிக் கடன்

அது எண்ணிக்கையில் 16 இலட்சம்.
இவர்களுக்காக பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும்
குரலெழுப்பி இருக்கிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இதற்காக சமூக
ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்தோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்சி அதிகாரம்
கிடைக்கவில்லை. என்றாலும் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அதற்கான
வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதற்காக நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை முன்மொழிந்த போது அதற்கு எதிர்ப்பு
தெரிவித்தவர்களும் இருந்தார்கள்.

வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு தடைகள்
காணப்படுகின்றன. எனவே அவற்றை இலகுபடுத்துவோம். இந்த சமூகத்தில் காணப்படுகின்ற
திறமையானவர்களுக்காக தனியான விசேட வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம்.

இவை வெறும் வார்த்தைகளாக மாத்திரமன்றி செயற்பாட்டில் கொண்டு வருவோம். விசேட
தேவையுடையவர்களும் எமது நாட்டின் பிரஜைகளே. எனவே இந்த சமூகத்துக்காக சகல
வசதிகளையும் கொண்ட கல்விமுறை ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகளையும் வழங்குவோம் ” என்றார்.

Source: https://ibctamil.com/article/sajith-premadasa-on-disabled-people-rights-1725711975

NO COMMENTS

Exit mobile version