Home இலங்கை அரசியல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்: சஜித் சூளுரை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்: சஜித் சூளுரை

0

தனக்கு பட்டம் பதவிகளில் ஆசைகள் இல்லாத காரணத்தினால் தான் அதிகாரத்திற்கு வந்த உடனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்து நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார்.  

ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நேற்று (18) இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக்
கொண்டு வருவதாக ஆட்சியாளர்கள் தலதா மாளிகையில் எழுதி கையொப்பமிட்டு
கொடுத்தும் அந்தக் கதிரைக்குச் சென்ற பின் அதனை மறந்து விட்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி முறை

ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த
அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version