Home இலங்கை அரசியல் அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் மகிந்த அணி

அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் மகிந்த அணி

0

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைய இணக்கம் தெரிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அழைத்து வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் என ஜனாதிபதிக்கு விசுவாசமான கட்சிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தடையாக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தயார் என அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இருந்து விலகுவதற்கும் வெளியில் இருந்து ஆதரவு தருவதற்கும் தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version