Home இலங்கை அரசியல் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச!

பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச!

0

கண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியல் ஆர்வலர்கள் குழுவின் மோசமான நடத்தை மற்றும் தேவையற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மனப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

அதன்படி, சஜித் பிரேதாச தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிவாரண மையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறு விளைவித்த கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் மீது ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிவாரண மையம்

கண்டி மாநகர சபை வளாகத்தில் பராமரிக்கப்படும் ஒரு பேரிடர் நிவாரண மையத்திற்குச் சென்று, மாநகர சபை வளாகத்தில் பராமரிக்கப்படும் பேரிடர் நிவாரண மையத்தை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் காணொளி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

காணொளியில் கூறப்பட்டுள்ளபடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த நிவாரண மையம் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குச் சொந்தமான அறையில் பராமரிக்கப்படுவதாகவும், அந்த அறை எதிர்க்கட்சி விவாதங்களுக்குத் தேவைப்படுவதால், நிவாரண சேவைகளுக்கு அந்த அறையை இனி வழங்க முடியாது என்றும வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே எதிர்க்கட்சி தலைவர் குறித்த பதிவை பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version