Home இலங்கை அரசியல் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவோம்: சஜித் வலியுறுத்து

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவோம்: சஜித் வலியுறுத்து

0

யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் யுத்தத்தின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாடு கூட்டப்படுகின்றது, என்றாலும் எமது நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்த போதும், எந்த ஒரு தலைவரும் அவ்வாறான நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேசத்தில் நேற்று முன்தினம் (31) தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

சர்வதேச நன்கொடையாளர்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த மாநாட்டின் ஊடாக கிடைக்கின்ற உதவிகளை வடகிழக்கு மாத்திரமல்லாமல் முழு நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்வதற்கு பயன்படுத்த முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடாத்துவதோடு, அதன் ஊடாக வடகிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாமல் முழு நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஒரே நாட்டிற்குள் உச்சபட்ச அதிகாரத்தை பகிர்ந்து, அரசியல் ரீதியாக வளப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version