தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமக்குக் கற்பிப்பதற்குக் கதிரையும் மேசையும் எடுத்து வரச் சென்ன அரசாங்கம் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீதி நியாயம்
இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர் கொலைகள் நடைபெறுகின்றன.அதற்கான காரணத்தைக் கூற முடியாமல் அரசாங்கம் தவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமக்குக் கற்பிப்பதற்குக் கதிரையும் மேசையும் எடுத்து வரச் சொன்ன அரசாங்கம் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறது.
மேலும், அரசு மிகவும் மந்தமான கொள்கையையே கடைப்பிடிக்கிறது.ஆகவே இனிமேலாவது நாட்டில் நீதி நியாயத்தை நிலைநாட்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
