முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைக்குச் சென்றதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ராசிக்கு பலன் அதிகரித்துள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த போது ஊடகங்களின்கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”சஜித்துக்கு (Sajith Premadasa) அரசியல் சரியானதோடு எங்களுக்கு கட்சி பிழைத்து விட்டதாகவே தோன்றுகிறது.
அரசாங்கத்தை நடத்த தெரியாது
மேலும் தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் செய்ய தெரிந்த மாத்திரத்தில் ஜனாதிபதி அநுரவுக்கு (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தை நடத்த தெரியாது போல் தோன்றுகிறது.
இந்தநிலையில் அநுர ஒரு பக்கத்துக்கு வலுவை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே தோன்றுகிறது” என தெரிவித்துள்ளார்.
